194வது வருட கொடியேற்று விழா

194வது வருட கொடியேற்று விழா

வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் அயோத்தி மாவட்டத்தில் ஊர்களில் சிறப்புற்று விளங்கிய நிதி வளம் நில வளம் கலை வளம் பெற்ற மாணிக்கப்பூர் என்ற பூமியில் ஹிஜ்ரி 910ம் வருடம் எம் உயிரிலும் மேலான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் 23ம் தலைமுறைப் பேரராய் பிறந்த குதுபுல் அக்தாப் குதுபுல் மஜீத் சங்கைக்குரிய சங்கை மகான் சற்குணம் குடிகொண்ட பாதுஷா நாஹுர் சாஹுல் ஹமீது வலியூல்லாஹ் நாயகம் அன்னவர்களின் நினைவாக கல்முனை மாநகர மக்களால் நடாத்தப்படும் கொடியேற்று விழா இம் முறையூம் 194வது வருடமாக எதிர்வரும் 10.03.2016ம் திகதி வியாழக்கிழமை மாலை 05.00மணிக்கு கொடியேற்றதுடன் ஆரம்பிக்கப்பட்டு 12 தினங்கள் மிகச் சிறப்பாக நடைபெறவூள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
அன்றிலிருந்து 12 தினங்களும் தர்ஹாவில் நடைபெறும்
-----------------------------------------------------------------------------------
நிகழ்வுகள்
------------------
1) புனித அல்குர்ஆன் ஓதும் மஜ்லிஸ்
2) ஜலாலியா றாதிப் எனப்படும் பக்திப் பரவசம் பொங்கிடச் செய்யும் திக்ரு மஜ்லிஸ் (விஷேசமாக வெள்ளிக்கிழமை இரவுகளில்)
3) எஜமான் நாகூர் சாஹுல் ஹமீது வலியுல்லாஹ் நாயகம் அன்னவர்களின் புகழ்பாடும் மௌலிது மஜ்லிஸ்
4) அறவழிப் பாதையில் ஒளிச்சுடர் பரப்பும் அறிஞர் உலமாக்களின் சன்மார்க்க சொற்பொழிவு
5) பக்கீர் ஜமாஅத்தினரின் ராதிப் மஜ்லிஸ்...(எண்கோண மேடை திறந்த வெளியில்)
இறுதித் தினமாகிய 22.03.2016ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00மணிக்கு கொடியானது இறக்கி வைக்கப்பட்டு மாபெரும் கந்துாரி அன்னதானமும் வழங்கி வைக்கப்படும்
RELATED POSTS