மௌலவி அம்ஜத் அலி ஹழரத் அவர்கள் பற்றிய துண்டுப்பிரசுரமும் உண்மை நிலையும்

மௌலவி அம்ஜத் அலி ஹழரத் அவர்கள் பற்றிய துண்டுப்பிரசுரமும் உண்மை நிலையும்

கல்முனை ஸுன்னத் வல் ஜமாத் உலமா சபையின் முக்கிய உறுப்பினரும் கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் மற்றும் கல்முனை முஹிய்யித்தீன் ஜும்மா மஸ்ஜித் பேஷ் இமாமுமான மௌலவி அம்ஜத் அலி ஸகாபி ஹழரத் அவர்களை வஹ்ஹாபியாக சித்தரித்து “வஹ்ஹாபிச கொள்கையுடைய பேஷ் இமாமை பள்ளிவாயல் கடமையிலிருந்து உடன் நிறுத்துமாறு வேண்டுகோல்” என்ற தலைப்பில் “கல்முனை மஹல்லாவாசிகள்” என்ற உரிமைகோரலோடு அண்மையில் துண்டுப்பிரசுரம் ஒன்று வெளியாகியிருந்தது.
மௌலவி அம்ஜத் அலி ஹழரத் அவர்கள் வஹ்ஹாபி என்றும் அவரை உடனடியாக இமாமத்து பொறுப்பிலிருந்து நீக்கவேண்டும் என்பதுமே அந்த துண்டுப்பிரசுரத்தின் சாராம்சமாகும்.
உண்மையில் இந்த துண்டுப்பிரசுரத்தை பார்க்கும் கல்முனையைச் சேர்ந்த சுன்னத் வல் ஜமாத் பொதுமகனொருவன் இதில் கூறப்பட்டுள்ள விடையங்கள் நகைப்புக்குரியதென்பதையும் இதன் பின்னாலுள்ள தனிப்பட்டவர்களின் அரசியலையும் இலகுவாக புரிந்துகொள்ள முடியும்.
மௌலவி அம்ஜத் அலி ஹழரத் அவர்களைப் பொறுத்தவரை ஸுன்னத் வல் ஜமாத் பிரச்சாரப் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டு நாட்டில் பல பாகங்களில் சத்திய ஸுன்னத் வல் ஜமாத்துடைய போதனைகளை தைரியமாக பேசிவரும் ஓர் அறிஞராகும். மேலும் கல்முனையில் ஹுதா கோஷ்டியினர் வஹ்ஹாபிசத்தை விதைக்க முயற்சித்த போதெல்லாம் அதற்கு தக்கவாறு பதிலடி கொடுத்து ஷாபித் ஷரயி போன்ற வஹ்ஹாபிச ஏஜெண்டுகளை விரட்டியடித்த ஓர் தலைசிறந்த உலமாவாகும்.
மௌலவி அம்ஜத் அலி ஹழரத் அவர்களோடு கருத்தால் மோதி ஜெயிக்க வக்கில்லாத வஹ்ஹாபிச வம்பர்கள் இந்த சல்லிக்காசுக்கு பெறுமதியற்ற துண்டுப்பிரசுரத்தை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி மௌலவி அம்ஜத் அலி ஹழரத் அவர்கள் ஸுன்னத் ஜமாத்திலிருந்து விடுபட்டு வஹ்ஹாபிசத்தின் பக்கம் சேர தயாராகிவருவதாக பச்சைப் பொய்யை பரப்புரை செய்துவருகின்றனர்.
இதன் மூலம் சுன்னத் வல் ஜமாத்துக்கு மத்தியில் பிளவை உண்டுபண்ணலாம் என்றும் அம்ஜத் அலி ஹழரத் அவர்களின் பிரச்சார வேகத்தைக் கட்டுப்படுத்தலாம் என்றும் பகல் கனவு கண்டுவருகின்றனர். ஆனால் அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்கப்போவதில்லை.
மௌலவி அவர்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரம் ஊர்மக்களாலும் பள்ளிவாசல் நிர்வாகத்தாலும் குப்பை கூடைக்குள் போடப்பட்டுள்ள போதும் குப்பைக் கூடைக்குள் கிடந்த அதனை இந்த வஹ்ஹாபிச கிறுக்கர்கள் புனிதமான ஒன்றாக காட்டி அரசியல் செய்ய முற்படுகின்றனர்,இதனைக் கண்டு ஏமாற மக்களோ சமூகமோ தயாராக இல்லை என்பதையும் குறித்த வஹ்ஹாபிகள் புரிந்துகொள்ளவேண்டும்.
எதிர்வரும் 9ஆம் திகதி நடைபெறவுள்ள கல்முனை கடற்கரைப்பள்ளிவாசல் கொடியேற்றத்தை மௌலவி அம்ஜத் அலி ஹழரத் அவர்கள் முன்னின்று வழமையை விட மிக சிறப்பாக செய்ய தயாராகிவருவது இந்த விடையத்தில் வஹ்ஹாபிகளும் சில போலிகளும் மூக்குடைந்து போகப்போவதை உறுதிப்படுத்துகிறது.
எனவே இவ்வாறான துண்டுப்பிரசுரங்களும் வஹ்ஹாபிகளின் பொய்ப்பிரச்சாரங்களும் ஒருபோதும் கல்முனை வாழ் முஸ்லிம்களிடையே எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை.மேலும் இது தொடர்பில் அவதானமாக இருக்கும்படியும் கல்முனை வாழ் முஸ்லிம்களை கேட்டுக்கொள்கின்றோம்.
-அஸ்டோ மீடியா யுனிட்
RELATED POSTS

0 comments: