நேற்று (13.03.2016)சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் அகர ஆயுதம் ஏற்பாட்டில் நடைபெற்ற எனது 'மூசாப்பும் ஒரு முழ வெயிலும்' கவிதை நூல் அறிமுக விழாவின் நினைவுப் பதிவுகள் இவை.

கவிஞர் பாலமுனை பாரூக் தலைமையில் மூத்த கல்விமான் அலியார் பீர் முஹம்மது முன்னிலையில் நடந்தேறிய இந்நிகழ்வில் விளையாட்டுத் துறை பிரதியமைச்சர் சட்டத்தரணி கௌரவ. HMM.ஹரீஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் கௌரவ. ALM.நஸீர் மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி கௌரவ. ஆரீப் சம்சுதீன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். நூலின் முதற் பிரதியை ஹபீப் வங்கியின் கல்முனை கிளையின் முகாமையாளர் அல்ஹாஜ். ALM.அன்வர்தீன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்வில் கல்வியியலாளர்கள்,புத்தி ஜீவிகள்,பிரமுகர்கள்,ஊடகவியலாளர் கள், கலை இலக்கியவாதிகள்,ஆர்வலர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

விழாவின் தொடக்கத்தில் வரவேற்புரையை இலக்கியச் செயற்பாட்டாளர் MIM.நாளிரும், தலைமையுரையை பாலமுனை பாரூக்கும்,அறிமுகத்தை அகர ஆயுதத்தின் தலைமை செயற்பாட்டாளர் இலக்கியன் முர்ஷித்தும் நிகழ்த்தினர்.

மூசாப்பும் ஒரு முழ வெயிலும் நூல் பற்றி கருத்துரைகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர்களான கவிஞர் ஏயெம்.தாஜ், கவிஞர் எஸ்.றபீக் மற்றும் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், இலக்கிய விமர்சகர் ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் நிகழ்த்தியதுடன் கவிவாழ்த்துக்களை மூத்த கல்விமான் அலியார் பீர் முஹம்மது, எழு கவி ஜெலில், கிராமத்தான் கலீபா ஆகியோர் செய்தனர். சிரேஷ்ட பாடகர் கலாபூஷணம் ஏ. எம்.முஸ்தபா பாடலிசைத்தார்.துருவம் ஊடக வலையமைப்பின் பொருளாளர் MBM.றின்சான் நன்றியுரையாற்றினார்.

நிகழ்ச்சியின் தலைமை ஒருங்கிணைப்பை கலை இலக்கிய செயற்பாட்டாளர் எஸ்.எம்.அமீர் மேற்கொள்ள, இ.ஒ. கூ. பிறை எப்.எம்.அறிவிப்பாளர் ஜே.சியாவுல் ஹக் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்.

RELATED POSTS

0 comments: