யாறஸூலல்லாஹ்!

யாறஸூலல்லாஹ்!

யாறஸூலல்லாஹ்!
இறையின் முதலொளியே,
இதய இருளை நீக்கி வைக்கும்
ஈருலகின் சூரியனே,
உங்கள் மார்க்கத்தை
உலகிற்கு பரவச்செய்த
எஜமான் நாகூர் சாஹுல்
ஹமீது வலியுல்லாஹ்
நாயகம் அன்னவர்களின்
நினைவான கொடியேற்ற விழாவை
முன்னிட்டு இதனை சமர்ப்பிக்கின்றோம்.
என் இதயத்தில் குடிக்கொண்டுள்ள
“எஜமான் நாகூர் சாஹுல்
ஹமீது வலியுல்லாஹ்
நாயகம் எனும் வித்து
விரைவில் வளர்வதற்காக!
அவர்களின் நாவிலுள்ள
உமிழ் நீரைச் சுவைக்கின்றோம்
அவர்களின் நாவளமும் சொல்வளமும்
கிடைப்பதற்காக!
அவர்களை நாங்கள்
நெஞ்சோடு கட்டியணைக்கின்றோம்
அவர்களது நெஞ்சிலுள்ள
அறிவு ஞானங்களும்
கவிச் சுடர்களும் –எம்
நெஞ்சில் பாய்வதற்காக!
அவர்கள் வடித்த –உங்கள்
புகழ் மாலையை
தினமும் ஓதுகின்றோம்
உங்கள் அன்புக்காக!
எம்
பாவங்களை அவை அழிக்கும்
என்பதற்காக!
யாறஸூலல்லாஹ்!
உங்களை -நாம்
மறுமையில் சந்திக்கும்போது
எஜமான் நாகூர் சாஹுல்
ஹமீது வலியுல்லாஹ்
நாயகமுடன் வருவோம்
உங்களை சந்திப்பதற்காக!
யாஹபீபல்லாஹ்,
ஏற்றுக் கொள்ளுங்கள்
ஏழையின் பரிசாய்
இக்கவிதை – அஸ்டோவின்
அன்புக் காணிக்கையாக
அஸ்டோ - கல்முனை
RELATED POSTS

0 comments: