அழைப்பிதழ் !
அஸ்ஸாலமு அலைக்கும் அன்பின் கட்டார் நண்பர்களுக்கு
கத்தாரில் “கல்முனை மாநகரம்” நூல் வெளியீடு !
கத்தாரில் “கல்முனை மாநகரம்” நூல் வெளியீடு! கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையத்தின் (GFK) ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சகோதரர் ஏ. எம். பறகத்துல்லாஹ்வின் “கல்முனை மாநகரம்; உள்ளூராட்சியும், சிவில் நிர்வாகமும்” வரலாற்று ஆவண நூலின் நூல் அறிமுக விழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை கத்தார் அல் ஹிலாலில், ஏற்பாடாகியுள்ளது.
கல்முனை மாநரகம் என்று அழைக்கப்படும் நகரானது வெள்ளையன் ஆட்சி செய்த காலம் தொட்டு இன்று வரைக்கும் பல சிவில் நிர்வாக மற்றும் உள்ளூராட்சி அலகாக பிரகடனப்படுத்தப்பட்டு நிர்வாகங்கள் நடந்து வந்துள்ளன. கல்முனை ஏலவே கரவாகுப்பற்றாக குறிக்கப்பட்டு சனிட்டார் போர்ட், லோகல் போர்ட், பட்டின சபை, பிரதேச சபை, நகர சபை ஈற்றில் மாநகர சபையாக உருவெடுத்தது வரையில் சகல சிவில் நிர்வாகம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களையும் அதன் நிருவாக கட்டமைப்பையும், இன்னும் பல விடயங்களையும் உள்ளடக்கியதுதான் இந்நூலின் சிறப்பம்சம்.
நம் மண்ணின் இச்செளுமைமிகு வரலாற்றை நம்மவர்களிடையே கொண்டு செல்லும் பொருட்டு நம்மவர்கள் செறிந்து வாழும் கத்தாரில் இந்நூலின் அறிமுக விழாவினை ஏற்பாடு செய்துள்ளது கல்முனைக்கான மத்திய கிழக்கு அமையம்.
ஆகவே தாங்களும் தவறாது நிகழ்வில் கலந்துகொண்டு நூலின் பிரதியொன்றினைப் பெற்றிட பேரன்போடு அழைக்கின்றோம்.
“வரலாற்றை மறந்தவன் வரலாற்றை படைக்கமாட்டான்”
தொடர்புகளுக்கு: 0097477221062/0097466195683
ஜஸாக்கல்லாஹ் !


0 comments: