இறைபாதை = சுவனப்பாதை
*******************************************
இறை பாதை என்பது இலேசான பாதையல்ல. இந்த பாதையில் பயணம் செய்பவர்களுக்கு மட்டுமே இதன் வலிகள், வேதனைகள், சோதனைகள் புரியும்.
.
தலையில் பட்ட அடிகளின் வலிகள், நெஞ்சியில் குத்திய ஈட்டிகளின் வலிகள், பாதத்தில் குத்திய முட்களின் வேதனைகள். ஸுப்ஹானல்லாஹ்!
.
ஆனாலும் அவர்கள் தனது நேசனை காண வேண்டும் என்ற நோக்கத்தில் இறை உதவியோடும், பொறுமையோடும் தமது பயணத்தை தொடர்ந்து மேற்கொண்டு செல்வார்கள்.
.
கௌஸுல் அஃலம் முஹியத்தீன் அப்துல் காதர் ஜீலானி ரலியல்லாஹு அன்ஹு கூறினார்கள்:
அல்லாஹ் தன் அடியார்களை நேசிப்பதற்கு என்றே சில கசப்பான சோதனைகள் கொடுத்து நோட்டம் பார்க்கிறான். அச் சோதனைகளை பொறுமையுடன் குறை கூறாமல் சகித்துக் கொள்பவனே இறைவனின் மெய்யான தோழன்.
.
அறிவுலக மேதை இமாம் கஸ்ஸாலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறும்போது:
.
இந்தப் பாதையை (பக்திப் பாதையை) விரும்புகிறவர்கள் இன்றைக்கு மிக குறைவாகவே இருக்கிறார்கள். இதில் நடக்கிறவர்கள் இன்னும் குறைவு. இதில் நடந்து குறிக்கோளை அடைந்து வெற்றி பெறுகிறவர்கள் மிக மிகக் குறைவு.
.
எனினும் இந்த கடைசி தரத்தவர் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு இறைவன் தன்னுடைய அன்பையும் தன்னைப் பற்றிய அறிவையும் கொடுக்கிறான். தன் உதவியையும் பாதுகாப்பையும் வழங்குகிறான். தன் சொர்க்கத்தையும் ஒப்புதலையும் அளிக்கிறான்.
.
சிக்கலும், சிரமமும் நிறைந்ததொரு பாதை, எங்கு பார்த்தாலும் ஆபத்துக்கள் காட்சி அளிக்கின்றன. எப்படி திரும்பினாலும் துன்பங்கள் தோற்றமளிக்கின்றன. போதாததற்கு பகைவர்களும், வழிப்பறி கொள்ளைகாரர்களும் பாதை நெடுகிலும் நிறைந்திருக்கிறார்கள். இங்கு நண்பர்களும் துணைவர்களும் மிகக் குறைவு.
.
இந்த பாதையை பார்த்து விட்டு யாரும் முகம் சுளிக்க வேண்டியது இல்லை. இது புனிதமான பாதை, இது சுவர்க்கத்தின் பாதை.
.
Shafiyath Qadiriyah Rislath Reesh Hisam Hijas Amir Qathiri Prabakaran Dictator Ahamed Bilal

0 comments: