சீரழியும் அபாயாக்கள்-(தொடர்-1)
********************
"அபாயா "என்று தலைப்பை பார்த்ததும் பெண்களுக்குரியது என ஆண்களே ஓடி விடாதீர்கள்.நீங்கள் தான் பெண்களின் நிர்வாகிகள்.உங்களுக்கும் சேர்த்துத் தான் இப்பதிவு..
அபாயா என்பது பல ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ அதிக பட்ச தக்வாதாரிகள் மட்டுமே உடுத்திய உடையாகவே இருந்தது.ஆனால் இன்று அது முஸ்லிம் பெண்களின் தேசிய உடையாகவே மாறி விட்டது.அபாயா அணியாதவர்களை விரல் விட்டு எண்ணி விடக் கூடிய அளவிற்கு மலிந்து போய்விட்டது.
ஒரு பெண் அபாயா போட்டுத் தான் தன்னை மறைக்க வேண்டுமா?இல்லை தான் உடுத்தியுள்ள ஏதோ ஆடையால் தன் உடல் ,மற்றும் தலை தெரியாத வகையில்,உடலின் நிறம்,கட்டமைப்பு தெரியாத வகையில்
மறைத்துக் கொண்டால் போதுமா? என்று பத்வா கொடுக்கத் தெரியவில்லை.ஆனால் உடலின் கட்டமைப்பு,தலை,கை,கால்களின் அமைவு,கூந்தல்,தோளின் பரவல் என்பன தெரியாத வகையில் ஆடை பெரிதாக இருப்பதும் தோலின் நிறம் தெரியுமளவு மெல்லியதாக இருக்காமல் இருப்பதும் முக்கியம் என்பதை பல ஹதீஸ்களினூடாக அறிய முடிகிறது.அபாயாவின் நிறம் பற்றி உறுதியாக தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் அது பற்றி விளக்கவும்.
ஆனால் இன்றைய எமது கண்மணிகளின் அபாயாக்கள் நோக்கத்தை நிறைவேற்றுகிறதா?
ஷல்வார்,சாரி போல அபாயாவும் fancy dress ஆக ஆகி விட்டதா?
எவ்வளவு இறுக்கமாக உடுத்த முடியுமோ அவ்வளவு இறுக்கமாக உடுத்துவதால் உடலின் அங்கங்கள் பற்றி வகுப்பே எடுத்து விடலாம் போலுள்ளது.இதில் சில பேர் நிகாபையும் போட்டு நிகாபின் கண்ணியத்தையும் கெடுத்து விடுகின்றனர்.உடலை காட்டி விட்டு முகத்தை மூடுவதன் நோக்கம் தான் என்ன?யாருடைய உடல் என தெரியாதிருப்பதா?
saree habaya,shalwar habaya,butterfly habaya,umbrella cut habaya,open habaya-இதென்ன இது?
கேவலமாக இல்லையா?
அபாயா என்பது அழகை மறைப்பதற்கா?மெருகூட்டுவதற்கா?
அபாயாவை போட்டுவிட்டு கைக்குட்டை மாதிரி சிறிய முந்தானையால் அல்லது ஸ்காபால் தலையை மூடுவது.இல்லை தலையை சுற்றி இறுக்கி கட்டிக் கொள்வது..
காதுகளின் அடையாளம் வேறாக தெரிகிறது.தோள்களும் நெஞ்சுப் பகுதியும் தெளிவாக தெரிகிறது.தலையை மட்டும் மூடுவதா நோக்கம்?
பர்தா,ஜில்பாப் தேவையில்லை.இடுப்பு வரை மூடக் கூடிய அகன்ற முந்தானைகளுமா இல்லை?
உங்களுக்கு கண்ணாடியில் முன் பக்கம் மட்டுமே தெரியும்.ஆனால் பின்னால் வருபவரின் கண்களுக்கு பூட்டு போட முடிவதில்லை என்பதையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
அபாயா உடுத்தும் பெண் கட்டாயமாக ஒரு நீண்ட காற்சட்டை அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.ஏனெனில் சேற்று தரையில் நடக்கும் போதும்,சிறு குழந்தைகளை தூக்கி நடக்கும் போதும்,கடைத் தெருக்களில் நடக்கும் போதும் ,மோட்டார் சைக்கிளில் போகும் போதும் தன் அபாயாவை சற்று உயர்த்தும் போது அவர்களது கால்கள் தெரிகிறது.இது பற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.
திடீர் விபத்துகள்,தடுக்கி விழும் நிகழ்வுகளை நினைவில் கொண்டு காற்சட்டை ஒன்றை உடுத்துவது உகந்தது.
நம் பெண்களில் சிலர் இலகுவை நோக்காகக் கொண்டு அபாயாவின் உள்ளே டீ சேட்,மற்றம் லெகின்ஸ் உடுத்துவதை அவதானித்திருக்கிறேன்.ஆனால் அவர்கள் சூரிய ஒளிக்கு முன்னால் நடக்கும் போது ஒளியின் ஊடுபுகவிடும் தன்மை காரணமாக உடலின் அமைப்பு தெரிய வருகிறது.கருப்பு நிற அபாயாக்களிலும் இதை அவதானிக்கலாம்.உள்ளே உடுத்தும் உடை பெரிதாக இருப்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அபாயாவின் துணி சில்க்,மற்றும் streched ஆக இருப்பதால் உள்ளே உடுத்தும் ஆடைகள் பற்றி சிரத்தை எடுப்பது சிறந்தது.(எழுத முடியாமை காரணமாக எழுதவில்லை.
அல்லாஹ் அழகானவன்.அழகையே விரும்புகிறான்.எப்படிப் பட்ட அபாயாவையும் அணிந்து கொள்ளுங்கள்.ஆனால் அபாயாவின் நோக்கம் பற்றி நினைவில் கொள்ளுங்கள்.
Share with all muslims


0 comments: