சுபஹ் தொழுகை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யார் சுபஹ் தொழுதுவிட்டாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார்

சுபஹ் தொழுகை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யார் சுபஹ் தொழுதுவிட்டாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார்

சுபஹ் தொழுகை
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “யார் சுபஹ் தொழுதுவிட்டாரோ அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் உள்ளார், அல்லாஹ்வின் (இந்த) பொறுப்பை நீங்கள் உடைத்துவிடாதீர்கள்” ஜூன்தூப் பின் ஸ¥ஃப்யான் (ரலி) ஆதாரம் - திர்மிதி

அதிகாலைத் தொழுகைக்குச் செல்லும் ஒருவரைப் பார்த்து இறைவன் வியக்கும் காட்சியை நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு விவரிக்கின்றார்கள் :-

“படுக்கை, போர்வை, மனைவி, மக்களின் அரவணைப்பு அத்தனையும் உதறிவிட்டு அதிகாலையில் எழும் மனிதனைப் பார்த்து இறைவன் வியப்படைகின்றான். வானவர்களிடம் கேட்கின்றான்: வானவர்களே எனது இந்த அடியானைப் பாருங்கள்.

படுக்கை, போர்வை, மனைவி, மக்கள் அத்தனையையும் உதறிவிட்டு அதிகாலையில் எழுந்துவிட்டான். எதற்காக? என்ன வேண்டும் இந்த அடியானுக்கு? எனது அருள்மீது ஆசை வைத்தா? எனது தண்டனையைப் பயந்தா? பின்னர் வானவர்களிடம் அல்லாஹ்வே கூறுகின்றான் :-

“உங்களை சாட்சி வைத்துக் கூறுகின்றேன். அவன் ஆசைப்பட்டதை நான் அவனுக்கு நிச்சயம் கொடுப்பேன். அவன் எதைப் பயப்படுகிறானோ அதிலிருந்து நிச்சயம் அவனுக்கு நான் பாதுகாப்புக் கொடுப்பேன்” ஆதாரம் - அஹ்மத்.

எனவே முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஐவேளைத் தொழுகையையும் நிலைநாட்டி சுபஹ் தொழுகையை தவறாது பாதுகாப்போமாக

RELATED POSTS

0 comments: