தோண்டி எடுக்கப்பட்ட சிறுமியின் சடலம்...
மதவாச்சி பகுதியில் வாகன விபத்தில் உயிரிழந்த நிலையில் அடக்கம் செய்யப்பட்ட சிறுமி ஒருவரின் சடலம் மீண்டும் இரகசியமாக தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 28ஆம் திகதி குறித்த சிறுமியின் இறுதிக் கிரியைகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு மயானத்திலுள்ள கல்லறையில் இருந்து இரகசியமாக ஒருவரால் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறுமியின் தந்தை மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதனையடுத்து மயானத்துக்கு அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரைத் தேடி மதவாச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 comments: