ஆடைத் தொழிற்சாலைக்கு வந்த பெண்களை படம் எடுத்தவர் கைது..

ஆடைத் தொழிற்சாலைக்கு வந்த பெண்களை படம் எடுத்தவர் கைது..


ஆடைத் தொழிற்சாலைக்கு வந்த பெண்களை படம் எடுத்தவர் கைது...

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில்  இன்று வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் திறந்து வைக்கப்பட்ட  தொழிற்சாலைக்கு முன்பாக நின்று கொண்டு இளம் பெண்களை தனது அலைபேசியில் படம் எடுத்துக்கொண்டு நின்ற குற்றச்சாட்டின் பேரில் ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்த ஆடைத் தொழிற்சாலையில் பணி புரிவதற்காகவும் ஆடைத் தொழிற்சாலைத் திறப்பு விழா ஏற்பாடுகளுக்காகவும் வந்த இளம் பெண்களை தனது அலைபேசியில் இந்தச் சந்தேக நபர் படம் எடுத்துக் கொண்டு நின்றுள்ளார். இந்நிலையில், ஜனாதிபதி வருவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்காக ஏற்கெனவே அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்ட உத்தியோகஸ்தர்கள் இதை அவதானித்துச் சந்தேக நபரைக் கைது செய்யதுல்லனர்  அவரது அலைபேசியைப் சோதித்த போது, பல்வேறு கோணங்களில் பெண்கள் படம் பிடிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நீல மற்றும் நிர்வாணப் படங்களும் காணப்பட்டதாக தெரிவித்தனர். இச்சந்தேக நபரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
RELATED POSTS

0 comments: