கல்முனை இமாம் விளையாட்டுக் கழகம் நடாத்திய முக்கோண சுற்றுப் போட்டியில் இறுதிச் சுற்றில் யங்பேட்ஸ் அணி அபார வெற்றி

கல்முனை இமாம் விளையாட்டுக் கழகம் நடாத்திய முக்கோண சுற்றுப் போட்டியில் இறுதிச் சுற்றில் யங்பேட்ஸ் அணி அபார வெற்றி


கல்முனை இமாம் விளையாட்டுக் கழகம் நடாத்திய முக்கோண சுற்றுப் போட்டியில் இறுதிச் சுற்றில் யங்பேட்ஸ் அணி அபார வெற்றி

 கல்முனை இமாம் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடை பெற்ற இறுதி சுற்றுப் போட்டி

இச் சுற்றுப் போட்டி இமாம் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும் செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் தலைவருமான உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா தலைமையில் கல்முனை சந்தாங்கேனி மைதானத்தில் இடம் பெற்றது

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் விஷேட அதிதியாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் பெஸ்டர் றியாஸ் மற்றும் கௌரவ அதிதிகளாக முன்னால் விளையாட்டுத்துறை  அதிகாரி எம்.எம் முஸ்தபா, இமாம் விளையாட்டுக் கழகத்தினை சேர்ந்த உயர் பீட உறுப்பினர்களான பிரதித் தலைவர் ஸாஹிர் கரீம், தவிசாளர் எம்.ஜ.எம் ஜிப்ரி, செயலாளர் ஏ.அனீஸ், முகாமையாளர் ஆசிரியர் றிபான் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்

 இந்நிகழ்வில் இமாம் விளையாட்டுக் கழகத்தின் அழைப்பினையேற்று வருகைதந்த அஸ்ஸம்ஸ் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் எல்.எம் சர்ஜுன்,ஆலோசகர் தேசமானிய்ய ஜவ்பர், ஜிம்ஹான கழகத்தினை சேர்ந்த எஸ்.எல் லாபிர், லக்கிஸ்டர் கழகத்தினை சேர்ந்த தலைவர் ஏ.பி.பைஸல், தன்டர்ஸ் கழகத்தினை சேர்ந்த செயலாளர் தாரிக், றினோன் விளையாட்டுக் கழகத்தினைச் சேர்ந்த செயலாளர் எஸ்.எச்.எம் அஸ்மி, ஜங்பெட்ஸ் கழகத்தினைச் சேரந்த  செயலாளர் வை.எம் இந்பாயிஸ் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இச்சுற்றுப் போட்டியில் சிறப்பாட்டக்காரறுக்கான விரிதினை யங்பேட்ஸ் அணியினைச் சேர்ந்த இம்றாஸ் பெற்றுக் கொண்டார், தொடர் ஆட்ட நாயகனாக ஜயங்பேட்ஸ் அணியினைச் சேர்ந்த தலைவர் ஜஹான்  விரிதினை பெற்றுக் கொண்டார், இம்முக்கோண சுற்று இறுதிப் போட்டியில் ஒரு பந்துக்கு மூன்று ஓட்டங்கள் தேவைப்படும் நிலையில் யங்பேட்ஸ் அணியினர் அபாரமான துடுப்பாட்டத்தினால் ஆறு ஓட்டங்கள் குவிக்கப்பட்டு வெற்றியை தனதாக்கிக் கொண்டது.

 இப்போட்டிற்கான அனுசரனையை செக்றோ ஸ்ரீலங்கா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.








RELATED POSTS

0 comments: