ஏறாவூர், மீராகேணி, RDS வீதியை சேர்ந்த புதியதோர் நோயாளியை உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.
09-09-2002 யில் பிறந்து இன்று 13 வயதை எட்டியுள்ள பாத்திமா சஸ்னா என்ற இச்சிறுமி வீட்டிலிருந்து வெளியில் நடமாட முடியாதபடி சிறுமியின் பாதுகாப்பு கருதியே காலில் சங்கிலி போட்டு கட்டிப்போட்டிருப்பதை பார்த்து ஒரு கனம் அசந்து போனேன்.
இச் சிறுமிக்கு பிறந்து இரு வாரங்களின் பின்னர் தலையில் கூடுதலான நீர் தேங்கி தலை பெரிதாகியதாலும், முள்ளந்தண்டில் பாரிய கட்டி உருவாகி இருந்ததாலும் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை செய்து தலையிலிருந்து இடுப்பு வரைக்கும் நீளமானதொரு "பட்ட" வைக்கப்பட்டிருக்கிறது.
இந்த "பட்டையை" இன்று வரைக்கும் அகற்றப்படாமலிருப்பதால்தான் ஓரளவு சமனிலையில் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு புத்திசுயாதீனமற்ற சிறுமியாகவும் காணப்படுவதால் பெற்றோரின் கண்காணிப்பிலிருந்து சிறிது நேரம் தவறினாலும் ஆடைகளை களைந்துவிட்டு நிர்வான நிலைக்கு வந்து வீட்டுக்கு வெளியில் ஓடுவதால்தான் இச்சிறுமிக்கு சங்கிலி போட்டு கட்டியிருக்கிறார்கள் என்பதை நேரடியாக கேட்டறிந்தேன்.
தந்தையை இழந்து தாயுடன் மாத்திரம் வாழ்ந்துவரும் இச்சிறுமியை மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாதமிருமுறை கொண்டு சென்று சிகிச்சை பெற்றுவர இச்சிறுமியின் தாய் படும்பாடு சொல்லில் அடங்காது.
தனது மகனொருவரின் மேசன் தொழிலில் கிடைப்பதை சாப்பாட்டுக்கு பயன்படுத்தினாலும் இச்சிறுமியின் வைத்திய தேவைக்கு பணமின்றி மிகவும் சிரமப்படுகிறார்கள்.
இப்படத்தில் இருப்பவர்தான் அண்மையில் மரணமடைந்த இச்சிறுமியின் தந்தை அப்துல் சலாம் என்பவராகும்.
இக்குழந்தைக்கு உதவ விரும்பினால்
MSM.NASIR, ACA.SALAM
AMANA BANK, ETAVUR, SRILANKA





0 comments: