பாகிஸ்தானில் தாய் மற்றும் சகோதரனின் உதவியுடன் கிராமவாசிகளால் 16 வயது சிறுமியை உயிருடன் எரித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எபோட்டாபாத் நகரின் பின்தங்கிய எல்லைக் கிராமமான கைபரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இளம் காதல் ஜோடிக்கு உதவிய குற்றச்சாட்டில் பழங்குடி இன மரபில் கிராமத்து முதியோரால் இத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

வாகனம் ஒன்றுக்குள் சிறுமி கட்டி வைக்கப்பட்டு போதையூட்டிய பின்னர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிறுமியை எரிப்பதற்கு உதவி செய்த தாய், சகோதரன் உள்ளிட்ட 15 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குடும்ப கௌரவத்துக்கு கேடு விளைவிக்கும் வகையில் செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து பாகிஸ்தானில் கடந்த ஆண்டு ஆயிரத்து 100 பெண்கள் குடும்ப அங்கத்தவர்களால் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED POSTS

0 comments: