கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் கடந்த 08ஆம் திகதி கடத்தப்பட்ட 29 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய், ஒரு வாரத்தின் பின்னர் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை மீட்கப்பட்டுள்ளதுடன் பெண்னை கடத்திய முன்னாள் கணவரை கைது செய்துள்ளதாக கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த தாய் கணவனிடமிருந்து விவாகரத்துப் பெற்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வரும் நிலையிலேயேகடந்த 08ஆம் திகதி கடத்தப்பட்டதாக செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர்கள் இருவரைக் பொலிஸார் கைது செய்து கல்முனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர் .இதனையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சந்தேகநபர்கள் இருவரையும் 10ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்திய போது இருவரும் சாட்சிகளால் அடையாளம் காட்டப்பட்டனர்.அதனையடுத்து, சந்தேகநபர்கள் இருவரையும் இம்மாதம் 25 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்ற நீதவான் பயாஸ் றஸாக் உத்தரவிட்டார்.இந்தக் கடத்தலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் பெண்ணின் முன்னாள் கணவரும் தேடப்பட்டு வந்த நிலையில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, கல்முனை பொலிஸார் யாழ்ப்பாணத்துக்கு சென்று அங்கு கடத்தப்பட்ட பெண், அவரது முன்னாள் கணவருடன் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியிலுள்ள வீடொன்றிலில் இருந்த நிலையில் மீட்கப்பட்டதுடன் முன்னாள் கணவன் கைது செய்யப்பட்டார்.குறித்த பெண், வைத்திய பரிசோதனைக்காக கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்இதனை நண்பர்களுடன் பகிரவும்.


0 comments: