கல்முனை சாஹிரா கல்லூரி கிழக்கு மாகாணத்துக்கு வெளிய உள்ளதா ? மாணவர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது
கிழக்கு மாகாண பாடசாலைகள் யாவும் நண்பகல் 12 மணிக்கு மூடப்படும் என நேற்று முன்தினம் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் - தண்டாயுதபாணி தெரிவித்தார்
12 மணிக்கு பாடசாலை நிறைவு பெறும் என ஆவலோடு இதனை எதிர்பார்த்து சென்ற கல்முனை சாஹிரா கல்லூரி
மாணவர்கள் இன்று ஏமாற்றத்துடன் 1 மணிக்கு முகம் கருகி வீடு திரும்பினார்கள்
நாளை கல்முனை சாஹிரா கல்லூரி வழமைபோல் பகல் 2.10 நிறைவு பெறுமாம் என ஒரு செய்தி கேள்வியுற்றேன் காரணம் கேட்டேன் அந்த மாணவரிடம் அவர் கூறிய பதில்
தேசிய பாடசாலையாம் 12.00 மூட முடியாதாம்
ஏன் சார் தேசிய பாடசாலை மாணவர்களை வெயில் சுட்டரிக்காதா ?
கல்முனை சாஹிரா கல்லூரி கிழக்கு மாகாணத்துக்கு வெளிய உள்ளதா ?
வகுப்பறையில் விசேடமாக குளிர்ரூட்டி ஏதும் பொருத்தி யுள்ளீர்களா?
வெயில் தாங்க முடியாமல் மாணவர்கள் முகத்தில் தண்ணீரை ஊற்றி கொண்டு பிரதான வீதிகளில் செல்லுகின்றனர் மிகவும் கவலையளிகின்றது




0 comments: