புனித பராஅத் இரவு!

புனித பராஅத் இரவு!


இன்ஷா அல்லாஹ்! எதிர்வரும் நாட்களில் ஷெய்த்தான்களின் ஓலங்கள், ஒப்பாரிகள் வரலாம். முஸ்லிம்கள் யாரும் அதை கணக்கில் எடுக்காமல் ஷஃபான் மாத அமல்களை நல்ல முறையில் செய்து இறைவனிடம் பாவமன்னிப்பு கேட்டு இறைவனின் அருளை பெற்றுக்கொள்வோம்!
.
ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: மனிதர்கள் ரஜப், ரமழான் ஆகிய இரு மாதங்களுக்கு மத்தியிலுள்ள ஒரு மாதம் விஷயத்தில் பாராமுகமாக இருக்கின்றனர். அது எப்படிப்பட்ட மாதம் எனில் அகிலத்தாரின் அதிபதியாகிய அல்லாஹ்வின்பால் வணக்க வழிபாடுகள் உயர்த்தப்படக்கூடிய மாதமாகும். (நஸாஈ, அஹ்மத்)
.
மேலும் கூறினார்கள்: ஷஃபான் மாதத்தின் 15 ம் நாள் வந்துவிட்டால் அந்நாளில் இரவில் நின்று வணங்குங்கள்! பகலில் நோன்பு வையுங்கள்! ஏனென்றால், நிச்சயமாக இறைவன் (அவ்விரவில்) கூறுகிறான்: என்னிடம் பாவமன்னிப்பு தேடுவோர் உண்டா? அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். என்னிடம் ரிஸ்க் வேண்டுவோர் உண்டா? அவர்களுக்கு ரிஸ்க் தருகிறேன். என்னிடம் கேட்போர் உண்டா? அவர்களுக்கு நான் வழங்குகிறேன். சுபஹ் தொழுகையின் நேரம் வரை இவ்வாறு பலவற்றை சொல்லி கேட்டுக் கொண்டேயிருப்பான்.
இப்னு மாஜா 1388, இமாம் பைஹகி - ஷுஃபுல் ஈமான் 3822
.
எதிர்வரும் நாட்களில் முஸ்லிம்களின் ஈமானை பிடுங்கி எடுக்கக்கூடிய மனித உருவத்தில் நடமாடும் ஷெய்தான்கள் தொலைக்காட்சி மூலமாகவோ, அல்லது பேஸ்புக், யூடுப், வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாக பராஅத் இரவு ஷிர்க், பித்அத் என்று ஒப்பாரி வைத்து ஊளையிட்டு முஸ்லிம்கள் அமல் செய்வதை தடுத்து நிறுத்த வரலாம்.
.
அப்படிப்பட்ட ஷெய்த்தான்களை அடையாளம் கண்டால் உடனே தூரமாகி கொள்ளுங்கள்.
.
குறிப்பு: இப்படி ஷிர்க், பித்அத் என்று ஒப்பாரி வைத்து ஊளையிட வரவிருக்கின்ற ஷெய்த்தான்கள் தொப்பி அணிந்தும் வரலாம், தொப்பி அணியாமல் பரட்டை தலையுடனும் வரலாம். ஆதலால் இந்த இரண்டு வகையான ஷெய்த்தான்களிடம் இருந்து விழிப்பாக இருந்துகொள்ளுங்கள்!
ஜும்ஆ குத்பாக்களிலும் சில ஷெய்தான்கள் ஓலமிடலாம்.
RELATED POSTS

0 comments: