சென்னபட்டனாவில் உள்ள ஹஸ்ரத் அஹீல் ஷா ஹாத்ரி தர்காவிற்கு நானும் என்னுடைய மனைவியும் சென்று இருந்தோம்.ஏறத்தாழ 300 வருடங்கள் பழமையான தர்க்கா,இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது

சென்னபட்டனாவில் உள்ள ஹஸ்ரத் அஹீல் ஷா ஹாத்ரி தர்காவிற்கு நானும் என்னுடைய மனைவியும் சென்று இருந்தோம்.ஏறத்தாழ 300 வருடங்கள் பழமையான தர்க்கா,இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது

சென்னபட்டனாவில் உள்ள ஹஸ்ரத் அஹீல் ஷா ஹாத்ரி தர்காவிற்கு நானும் என்னுடைய மனைவியும் சென்று இருந்தோம்.ஏறத்தாழ 300 வருடங்கள் பழமையான தர்க்கா,இப்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது.தர்க்காவினுள் இருசமாதிகள் அழகியவேலைப்பாடுகளுடனும்,அழகியதுணிகள் போர்த்தப்பட்டு,மணம்வீசும் மலர்களும்,அத்தர்-பன்னீர் போன்ற வாசனை திரவியங்களின் நறுமணத்தாலும் நிரம்பி இருந்தது.
        இந்த தர்காவிற்கு கர்நாடகம்,தமிழ்நாடு,இந்தியாவின் அனைத்து பகுதிகள்,வெளிநாட்டு முஸ்லீம் அன்பர்களும்,ஹிந்துக்களும் வருகின்றனர்.உடல்நலம் பாதிக்கப்பட்டோர்,அமானுஷ்ய சக்திகளால் பாதிக்கப்ட்டோர் இங்குவந்து பிரார்த்தனை செய்து குணமடைகிறார்கள்.
             இங்குவரும் பக்தர்கள் ரோஜாபூக்கள்,வாசனை உள்ள ஊதுபத்திகள்,அத்தர்,பன்னீர்போன்ற வாசனை பொருள்களை சமாதியில் தூவி வழிபாடு செய்கின்றனர்.மேலும் ஏதாவது பிரார்த்தனை செய்து,பூட்டு ஒன்றைவாங்கி வந்து சமாதியின் சுற்றிலும் உள்ள கம்பிகளில் பூட்டுகிறார்கள்.இப்படி பூட்டுபோடுபவர்கள் பிரார்தனை விரைவில் நிறைவேறுவதாக ஐதீகம்.
        சமாதியின் உட்புறம் மிக அழகிய கண்ணாடிவேலைப்பாடுகளுடனும்,அலங்கார விளக்குகளுடனும் மிகவும் அழ்காக உள்ளது.மிக அமைதியாக அமர்ந்து பிரார்தனை செய்கிறார்கள்.நாங்களும் பூட்டு பூட்டி பிரார்த்தனை ச்ய்து கொண்டோம்.என்னால் நல்ல ஒரு அதிர்வை இந்த தர்காவில் உணர முடிந்தது,மனதில் இனம் புரியாத நிம்மதி கிடைத்தது.
         நம் இந்துகோவிகளைப்போன்றே இங்கும் கொடிமரம் உள்ளது.கொடிமரத்தின் அருகில் அகல்விளக்கு,ஊதுபத்தி ஏற்றி வழிபாடுசெய்கிறார்கள்.இங்கு வருடம் ஒருமுறை நடைபெறும் சந்தனக்கூடு திருவிழா மிகவும் பிரசித்தம்.

ஒரு ஜீவசமாதி சென்று வழிபட்ட ஆத்ம திருப்தி மனதிற்கு கிடைத்தது.











RELATED POSTS

0 comments: