நோன்பு மாதமும் ஷெய்த்தானும்

நோன்பு மாதமும் ஷெய்த்தானும்

அல்லாஹுதஆலா உலகில் மனிதர்களுக்கு அமல்களை தந்ததன் நோக்கம், ஒவ்வொரு மனிதனும் இந்த அமல்களின் மூலம் தன்னுடைய உள்ளத்தை தூய்மைப்படுத்தி ஆத்மாவை பரிசுத்தப்படுத்த தான். மனிதன் தான் வந்த இடத்தை அதாவது தன் ரப்பை அடைய வேண்டும். இதுதான் நோக்கம்.
.
ஆனால் இன்று நாம் வெறும் சடங்கு சம்பிரதாயமாக அமல்களை செய்து வருகிறோம். இன்ஷா அல்லாஹ்! நோக்கத்தை அறிந்து அமல் செய்து வெற்றி பெறுவோம்!
.
ஆனால் இந்த ரமலான் மாதத்தில் எதிர்வரும் நாட்களில் மனித உருவில் பல ஷெய்த்தான்கள் உங்களிடம் நேரடியாகவோ அல்லது தொலைக்காட்சி, வானொலி, Youtube, Facebook மற்றும் இணையத்தளங்கள் மூலம் வரக்கூடும்.
.
உங்களிடம் வந்து தராவீஹ் எட்டு ரக்அத் தான் தொழவேண்டும், சவூதியில் பிறை பார்த்துதான் நோன்பு நோற்க வேண்டும், சந்திரனில் பிறை பார்த்துதான் பெருநாள் கொண்டாட வேண்டும் என்றும் இன்னும் மனிதர்களின் உள்ளங்களில் எப்படி எப்படியெல்லாம் சந்தேகங்களை உருவாக்கி மனிதர்களிடம் சண்டை சச்சரவுகளை உருவாக்கி உள்ளத்தை (நப்சை) தூய்மைப்படுத்த விடாமல் தடுக்க ஷெய்த்தான் பல வழிகளை கையாள்வான்.
.
இப்படிப்பட்ட ஷெய்த்தான்களை கண்டால் அவர்களுடன் நீங்கள் சண்டை சச்சரவுக்கு போகாதீர்கள். அவர்களுடன் வாதம் செய்யாதீர்கள். அவர்களின் உரைகளை கேட்காதீர்கள். அவர்களை விட்டும் தூரமாகுங்கள். உதாரணமாக பேஸ்புக்கில் அப்படிப்பட்ட ஷெய்த்தான்களை கண்டால் உங்கள் Friend List இல் இருந்து நீக்கி விடுங்கள்.
.
ஸஹாபாக்கள், தாபிஈன்கள், தபஅத் தாபிஈன்கள், இமாம்கள், இறைநேசர்கள் சென்ற பாதையில் செல்லுங்கள் அதுதான் வெற்றி பாதை.
.
நப்ஸ் அம்மாரா எனும் கீழான படித்தரத்தில் இருந்து லவ்வாமா, முல்ஹிமா, முத்மஹின்னா போன்ற உயர்ந்த படித்தரங்களை கடந்து செல்லும் பாக்கியத்தை அல்லாஹ் நம் அனைவருக்கும் வழங்குவானாக! ஆமீன்.

www.mailofislam.com
RELATED POSTS

0 comments: