🌕 *பத்ரு போர் தரும் படிப்பினைகளும் ஆதாரங்களும்* 🌕
பத்ர் ஸஹாபாக்களின் புகழ் பாடும் ஆதார கிரந்தங்கள்
பாகம் : 01
✨ *தஃப் அடித்து கவி வடிவில் புகழ் பாடல்* ✨
ஹழ்ரத் ருபய்யிஃ பின்த் முஅவ்வித் ரலியல்லாஹு அன்ஹா தெரிவிக்கின்றார்கள்
எனக்கு திருமணம் நடந்த பின்னர், நபிகள் நாயகம் ஸல்லல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள் என்னிடம் வந்தார்கள். எனக்கருகில் இப்போது நீங்கள் (ஹதீஸின் இரண்டாவது அறிவிப்பாளர்) அமர்ந்து இருப்பது போல் (அத்தகைய தூரத்தில்) என் விரிப்பின் மீது அமர்ந்தார்கள். அப்போது சில சிறுமிகள் பத்ர் போரில்ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி,
*“எங்களிடையே இறை தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்”* என்று கூறினாள். உடனே நபி ஸல்லல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்கள். இதை விட்டு விட்டு நீ முன்பு சொல்லி கொண்டிருந்ததை சொல் என்றார்கள்.
ஸஹிஹுல் புகாரி ஷரீஃப் அபூதாவூத் ஷரீஃப் திர்மிதி ஷரீஃப்
எனது திருமண வைபவத்தின் போது இறைத்தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி வஸல்லம் அவர்கள் எனது இல்லம் வந்தார்கள். அந்த நேரத்தில் *சிறுமிகள் பத்ர் போரில் ஷஹீதான முன்னோர்களை புகழ்ந்து பாடி தஃப் அடித்துக் கொண்டிந்தார்கள்.*
ஹழ்ரத் ருபய்யிஃ பின்த் மு அவ்வித் ரழியல்லாஹு அன்ஹா
ஸஹிஹுல் புகாரி ஷரீஃப் , திர்மிதி ஷரீஃப் , அபூதாவூத் ஷரீஃப்
✨ *இறை தூதர் ஸல்லல்லாஹுஅலைஹி நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்கள்* ✨
அனஸ் பின் மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களைப் பற்றி எங்களிடம் கூறளானார்கள்.அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பத்ருப் போர் நடக்கக்கூடிய மைதானத்தில் நடந்து சென்று எங்களிடம் பத்ருப் போரில் எதிரிகள் மாண்டு கிடக்கவிருக்கும் இடங்களைக் *இன்ஷா அல்லாஹ்! நாளைய தினம் இன்னார் கொல்லப்படும் இடம் இது... இன்ஷா அல்லாஹ்! நாளைய தினம் இன்னார் கொல்லப்படும் இடம் இது... என்று தாங்கள் விரலால் சுட்டிக் காட்டினார்கள்.* சத்திய (மார்க்க)த்துடன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை *அனுப்பியவன் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர்ஸல்லல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட இடங்களில் பிசகாமல் சரியாக அவர்கள் மாண்டு கிடந்தனர்.*
முஸ்லிம் ஷரீஃப் திர்மிதி ஷரீஃப்
✨ *உயிரற்ற சடலங்கள் செவியேற்கின்றன* ✨
அபூ தல்ஹா ரழியல்லாஹு அன்ஹு அறிவித்தார்.
பத்ருப் போர் (நடந்து முடிந்து)நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்
கிணற்றில் போடப்பட்ட குறைஷித் தலைவர்களை பத்ர் முடிந்த மூன்றாம் நாள் அவ்விடத்திற்கு சென்று (குறைஷித் தலைவர்கள் போடப்பட்டிருந்த) கிணற்றருகில் நபியவர்கள் நின்றார்கள். (கிணற்றோரம் நின்றிருந்த) நபி ஸல்லல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், (அதில் எறியப்பட்டிருந்த) அவர்களின் பெயர்களையும், அவர்களின் தந்தையரின் பெயர்களையும் குறிப்பிட்டு, “இன்னாரின் மகன் இன்னாரே! இன்னாரின் மகன் இன்னாரே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நீங்கள் கீழ்ப்படிந்து நடந்திருந்தால் (இப்போது அது) உங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தானே! ஏனெனில், எங்களுடைய இரட்சகன் எங்களுக்கு வாக்களித்த (நன்மை)தனை உண்மையானதே என்று நாங்கள் கண்டு கொண்டோம். உங்களுக்கு உங்களுடைய இரட்சகன் வாக்களித்த (தண்டனை)தனை உண்மையானது தான் என்று நீங்கள் கண்டு கொண்டீர்களா?“ என்று கூறினார்கள்.
உடனே (அருகிலிருந்த) உமர் ரழியல்லாஹு அன்ஹு, *“இறைத்தூதர் அவர்களே! உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?*
“ என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்ல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள், *“என்னுடைய உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக! நான் கூறுவதை (கிணற்றில் உள்ள) இவர்களை விட நன்கு செவியேற்பவர்களாக நீங்கள் இல்லை”* என்று கூறினார்கள்.
ஷஹீஹ் ஷரீஃப் புஹாரி ஷரீஃப்
✨ *ஷுஹதாக்கள என்றும் உயிருள்ளவர்கள்* ✨
இன்னும், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை "(அவர்கள்) *இறந்துவிட்டார்கள்" என்று கூறாதீர்கள்;* அப்படியல்ல! *அவர்கள் உயிருள்ளவர்கள்;* எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ள மாட்டீர்கள்.
அல்குர்ஆன் ஷரீஃப்
மேலும்...
அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டவர்களை *மரித்தவர்கள் என்று நிச்சயமாக எண்ணாதீர்கள்* -
தம் றப்பினிடத்தில் அவர்கள் *உயிருடனேயே இருக்கிறார்கள்* (அவனால்) அவர்கள் உணவளிக்கப்படுகி
றார்கள்
அல்குர்ஆன் ஷரீஃப்
நன்றி : www.muhieddeentv.com

0 comments: