கல்ஹின்ன பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்றிருந்த முறுகலைத் தொடர்ந்து இன்றிரவு பள்ளிவாசல் மற்றும் சில வீடுகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளது.
நேற்று மாலை சிங்கள வாலிபர்கள் சிலரால் ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து பொலிசார் தலையிட்டிருந்த நிலையில் இன்று படகொல்லாதெனிய, பெபிலகொல்ல பள்ளிவாசல்கள் மற்றும் சில வீடுகள் மீது கல்வீச்சு இடம்பெற்றுள்ளது. இதேவேரைள, அல் மனார் பாடசாலை பள்ளிவாசல் மீதும் கல்வீசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்ற அதேவேளை ஊர் மக்களை அமைதிகாக்கும் படி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதேச முக்கியஸ்தர்கள் இது தொடர்பில் பொலிசரைத் தொடர்பு கொண்டு மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 comments: